வரும் 23 ஆம் தேதி முதல்வர் கோவை வருகை: மாநகர பகுதிகளில் முழு வீச்சில் சாலை பராமரிப்பு பணிகள்..!

உக்கடம் - பொள்ளாச்சி சாலை, ரேஸ்கோர்ஸ், நஞ்சுண்டாபுரம், சாலை, ராமநாதபுரம், போத்தனூர் ஆகிய இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வரும் 23 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை வருவதை முன்னிட்டு, கோவை மாநகர் பகுதியான உக்கடத்தில் சாலை பராமரிப்புபணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.



வரும் 24ஆம் தேதி, கோவைஈச்சனாரி பகுதியில் உள்ளரத்தினம் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள காலி இடத்தில் நடக்கும் அரசு விழாவில், பங்கேற்கவுள்ள முதல்வர், ஒரு லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சிக்கான,ஏற்பாடுகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில்நடைபெற்று வரும் நிலையில், அரசு விழாவில் பங்கேற்கும் பயனாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



முதல்வர் வருகையை முன்னிட்டு உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை ஓரங்களில் தேங்கி இருந்த மண் மற்றும் காய்ந்த செடிகள் அகற்றப்பட்டு வருகிறது. சாலையில் கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் என பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதேபோல, மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, தெற்கு மண்டலத்துக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் சாலை, போத்தனூர் சாலை, பொள்ளாச்சி பிரதான சாலை ஆகியவற்றில் நடைபாதை கற்கள் சீரமைத்தல், மையத் தடுப்பு சுவர்களுக்கு வர்ணம் பூசுப்பணி நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதமாக முடிக்க மாநகராட்சி ஆணையாளர்பிரதாப்உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...