வரும் 23 அம தேதி முதல்வர் கோவை வருகை: மாநகர பகுதிகளில் முழு வீச்சில் சாலை பராமரிப்பு பணிகள்..!

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை, ரேஸ்கோர்ஸ், நஞ்சுண்டாபுரம், சாலை, ராமநாதபுரம், போத்தனூர், ஆகிய இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: வரும் 23 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை வருவதை முன்னிட்டு, கோவை மாநகர் பகுதியான உக்கடத்தில் சாலைபராமரிப்புபணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

வரும் 24ஆம் தேதி, கோவைஈச்சனாரி பகுதியில் உள்ளரத்தினம் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள காலி இடத்தில் நடக்கும் அரசு விழாவில், பங்கேற்கவுள்ள முதல்வர், ஒரு லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சிக்கான,ஏற்பாடுகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில்நடைபெற்று வரும் நிலையில், அரசு விழாவில் பங்கேற்கும்பயனாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



முதல்வர் வருகையை முன்னிட்டு உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை ஓரங்களில் தேங்கி இருந்த மண் மற்றும் காய்ந்த செடிகள் அகற்றப்பட்டு வருகிறது.



சாலையில் கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் என பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதேபோல, மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, தெற்கு மண்டலத்துக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் சாலை, போத்தனூர் சாலை, பொள்ளாச்சி பிரதான சாலை ஆகியவற்றில் நடைபாதை கற்கள் சீரமைத்தல், மையத் தடுப்பு சுவர்களுக்கு வர்ணம் பூசுப்பணி நடைபெற்று வருகிறது.

பணிகளை துரிதமாக முடிக்க மாநகராட்சி ஆணையாளர்பிரதாப்உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...