அட்டப்பாடி வனப்பகுதியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு - கேரள வனத்துறை மற்றும் போதை தடுப்பு துறை நடவடிக்கை…!

புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், சுமார் 45 நாட்கள் ஆன 345 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள வனத்துறை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அந்த இடத்திலேயே தீயிட்டு அழித்தனர்.


கோவை: ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி சில்லரை விற்பனை செய்வது, வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்ப்பது போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க போதை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக கேரள எல்லை பகுதியான அட்டப்பாடி மண்ணீஸ்வரன் முடி வனப்பகுதியில் 900 அடி உயரத்தில் கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக பயிர் செய்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அட்டப்பாடி வனத்துறை மற்றும் போதை தடுப்பு துறையினர் வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குறுக்கத்திக்கல் என்ற இடத்தில், சுமார் 45 நாட்கள் ஆன 345 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, சோதனைக்கு சென்ற கேரள வனத்துறை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் கஞ்சா செடிகளை வேருடன் பிடுங்கி அந்த இடத்திலேயே தீயிட்டு அழித்தனர்.



இதையடுத்து, அருகே உள்ள வனப்பகுதிகளிலும் கஞ்சா செடிகள் ஏதேனும் பயிரிடப்பட்டுள்ளதா? என தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...