கடும் பொருளாதார நெருக்கடியில், கோவை ஜாப் ஒர்க் நிறுவனங்கள்..!

கடந்த 2015 ஆண்டுக்கு பின், ஜாப் ஒர்க்குகளுக்கான தொகை உயர்த்தப்படவில்லை. ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்களை காக்க தவறினால், 30,000 குறுந்தொழில் கூடங்களில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்படும்.


கோவை: எட்டு வருடங்களாக ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தபடாத காரணத்தால், கடும் நெருக்கடியில் தத்தளித்து வருகின்றன கோவை ஜாப் ஒர்க்கில் ஈடுபட்டுவரும் குறுந்தொழில் கூடங்கள்.

5% - 12 % ஜி எஸ் டி உயர்வு, மின் கட்டணம், கட்டட வாடகை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என பிரச்னை மேல் பிரச்சனையை சந்தித்து வரும் குறுதொழிற் கூடங்களுக்கு, 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு பெரு நிறுவனங்கள் ஜாப் ஒர்க் தொகையை உயர்த்தி கொடுக்காததால் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.

இது குறித்து பேசிய காட்மா சங்கத்தலைவர் சிவகுமார்:



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரம் குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த குறுந்தொழில் கூடங்ககளை பொறுத்தவரையில், பெரும்பாலும் 90 சதவிகிதம் ஜாப் ஒர்க் பணிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

ஜாப் ஒர்க் என்றால் என்ன..?



ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு பெரு நிறுவனங்கள் இரும்பு, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்களை உலோகங்களாக கொடுத்து விடுவார்கள்.



அதனை அவர்களின் தேவைக்கேற்ப உருமாற்றி பம்பு செட், மின் மோட்டார், டெக்ஸ்டைல் இயந்திரங்களின் உதிரிபாகங்கள், கியர் பாக்ஸ், ஆட்டோ மொபைல் மெசினரிஸ்களிக்கான பாகங்களை ஜாப் ஒர்க் தொழில் கூடங்கள் தயாரித்து தருவார்கள்.

இவ்வாறு குறுந்தொழில் கூடங்களில் தயாரிக்கப்படும் சிறு, சிறு பாகங்களை ஒன்று சேர்த்து (assemble) செய்து பெரு நிறுவனங்கள் தங்களுக்கான பிராண்டட் புராடக்டுகளை தயாரித்து சந்தைபடுத்துவர்.

8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணம்.

கடந்த 2015 ஆண்டுக்கு பின், ஜாப் ஒர்க்குகளுக்கான ஊதியம் உயர்த்தப்படவில்லை. எட்டு வருடங்களாக இதற்கான கோரிக்கையை முன்வைத்தும், இன்றளவும் குறுந்தொழில் கூடங்களின் கோரிக்கைக்கு, பெரு நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை.

விலைவாசி உயர்வால் நெருக்கடியில் தத்தளிக்கும் குறுந்தொழில் கூடங்கள்



ஒரு புறம், ஜாப் ஒர்க் செய்ய கொடுக்கப்படும் தொகை உயராத நிலையில், செலவினங்களோ 2 முதல் 4 மடங்கு வரை அதிகரித்திருக்கின்றன. குறுந்தொழில் கூடங்களின் இயந்திர தேய்மான செலவினம் மற்றும் தொழில் கூடங்கள் இயங்கும் கட்டடத்துக்கான வாடகை இரண்டு முதல் மூன்று மடங்காக அதிகரித்திருக்கின்றன. அதேபோல, 5 சதவிகிதமாக இருந்த ஜி எஸ் டி 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. போக்குவரத்துக்கான பெட்ரோல் டீசல் விலை விண்ணைதொட்டிருக்கும் நிலையில், மின் கட்டனமும் தன் பங்குக்கு ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்களை பதம் பார்த்திருக்கின்றன.

ஜாப் ஒர்க் கூடங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பளமும் உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஜாப் ஒர்க் செலவினங்கள் 2015 ஐ ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிகரித்திருக்கின்றன. எனவே, ஜாப் ஒர்க் பணிகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.

30 ஆயிரம் தொழில் கூடங்கள்; 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.



ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே வேலை குறைவாகவே உள்ளதால், ஒடி (OT) என்று சொல்லும் ஓவர் டைமில் வேலை பார்த்து சம்பாதிக்கும் வழக்கம், தற்போது முற்றிலும் நடைமுறையில் இல்லை. சொல்லப்போனால், வாரத்தில் சில நாட்கள் கட்டாய விடுப்பு அறிவிக்கும் நிலை என்பதே நிதர்சனம்.

இனியும், பெரு நிறுவனங்கள் ஜாப் ஒர்க் தொகையை உயர்த்தி கொடுக்காமல் இருந்தால், பொறியியல் பட்டதாரிகள் முதல் படிக்கதோர் வரை பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.



ஜாப் ஒர்க் குறுந்தொழில் கூடங்களை காக்க தவறினால், முப்பதாயிரம் குறுந்தொழில் கூடங்களில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்படும்.

எனவே, 3 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, பெரு நிறுவனங்கள் ஜாப் ஒர்க் தொகையை உயர்த்தி, ஜாப் ஒர்க் குறுந்தொழிலை காக்க முன்வரவேண்டும் என்பதே காட்மா உள்ளிட்ட சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...