கோவை தனியார் தோட்டத்தில் சூதாட்டம் 17 பேர் கைது ரூ.11.64 லட்சம் பறிமுதல்...!

தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 நபர்களை நெகமம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.11.64 லட்சம் பணம், நான்கு சக்கர வாகனம், 6 இரண்டு சக்கர வாகனம், தங்க மோதிரங்கள் கைப்பற்றப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மொட்டபாளையம் வடக்கு தோட்டம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.11.64 லட்சம் பணம், நான்கு சக்கர வாகனம், 6 இரண்டு சக்கர வாகனம், 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் மற்றும் இரண்டு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 17 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...