கோவையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்ஸோவில் கைது…!

மேட்டுப்பாளையம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 41 வயதான தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

இவரது 2-வது மகளான 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது முதல் மகள் மற்றும் கடைசி மகள், அவர்களது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டாவது மகள் மட்டும் பெற்றோருடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்து கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டதால், அப்பா மற்றும் மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில், வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும், பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பின்னர், மகளிடம் நடந்ததை யாரிடமும் செல்ல கூடாது என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும், அவரது தந்தை அளித்த பாலியல் தொல்லை குறித்து சொல்லாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று, சிறுமி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று, போலீசாரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, சிறுமி அளித்த புகாரின் பேரில், விசாரணை செய்து சிறுமியின் தந்தை மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி

சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் அவரை கோவையில் உள்ள குழந்தை நல மையத்தில் சேர்த்தனர்.

அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் சூழலில், தந்தையே, மகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...