கோவையில் மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி- வானதி சீனிவாசன் துவக்கி வைப்பு

மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.



கோவை: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இ-ஷாரம் (E-Sharam) நல வாரிய திட்டம் ஆகியவற்றுக்கான அடையாள அட்டை வழங்கும் இலவச முகாமை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

கோவை பெரிய கடை வீதியில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இம்முகாமில் பெரிய கடைவீதியில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மத்திய அரசின் திட்டங்களில் பதிவு செய்தனர்.



அவர்களுக்கு இலவசமாக பதிவு செய்து தரப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வானதி சீனிவாசன், பிரதமர் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில், ஐந்து லட்ச ரூபாய்க்கான ஆயுஷ் மான் பாரத் காப்பீடு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் நிதி உதவி, உயிரிழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கும் இ-ஷாரம் திட்டம் ஆகியவை முக்கிய திட்டங்கள்.

மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள தகுதியானவர்கள்.

இன்று நடைபெற்ற முகாமில், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் இ-ஷாரம் திட்டத்தில் பதிவு செய்வதற்கான இலவச முகாமில் மக்கள் பலர் கலந்து கொண்டனர். இன்றைய முகாமில், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் குறித்து முகாம்கள் நடத்தி அமைப்பு சாரா தொழிலாளர்களை இத்திட்டத்தில் இலவசமாக பதிவு செய்ய வேண்டும். இது குறித்து நான் சட்டப்பேரவையில் பேசிய பொழுது, மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தற்போது இத்திட்டத்தில் பயனாளிகள் உள்ளதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள நமது மாநிலத்தில் அதிக அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, எந்த விதமான வித்தியாசமும் கருதாமல் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசுஅமல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...