திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு - கோவையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்புடைய முக்கிய ஆதாரமான கடத்தல் வாகனம், மாருதி சுசூகி வெர்சா வாகன உரிமையாளர்களிடம் என கோவையில் 250 பேரிடம் விசாரணை.


கோவை: திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமானகே.என். ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம்நடைப்பயிற்சிக்கு செல்லும் போது, மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலில் இவ்வழக்கை திருச்சி போலீசார் விசாரித்து வந்தனர். இதன் பின்னர்,வழக்கு வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடிடிஜிபி ஷக்கில் அக்தர்தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் சிறப்பு விசாரணை குகுவினர்,இந்த கொலை வழக்கின் முக்கிய தடயமான மாருதி சுசுகி வர்ஷா கார் பற்றி தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும்இதுவரை1400 மாருதி சுசுகி வர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் மட்டும் 250 மாருதி சுசுகி வெர்சாவாகன உரிமையாளர்களிடம் இன்று சிபிசிஐடி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை முகாமில் உள்ள சிபிசிஐடி போலீசார் இந்தவிசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...