கோவை உக்கடம் உயர் மின் கம்பிகள் மாற்றியமைக்கும் இறுதி கட்ட பணி துவக்கம் - போக்குவரத்து மாற்றம்…!

மின் இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்க்கும் இறுதி கட்டப்பணி, இன்று நடைபெற்று வருகிறது. உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலை, புட்டுவிக்கி, சுண்ணாம்பு காளவாய் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: உக்கடம் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் மாற்றி அமைக்கும் பணி துவங்கியதால் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்டுள்ளது.

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம்உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. உக்கடம் பேருந்து நிலையம் சந்திப்பு அருகே, 110 கிலோ வோல்ட் உயர் அழுத்த மின் கம்பிகள் இருப்பது, பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், பேருந்து நிலையம்சந்திப்பில் இருந்து துணை மின் நிலையம் வரை, சாலையை தோண்டி, ஐந்தடி ஆழத்தில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டன.



மின் இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்க்கும்இறுதி கட்டப்பணி, இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.



காலை 8 மணிக்கு துவங்கிய இந்த பணி மதியம் 12 மணி வரை நடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பணியின் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலை, புட்டுவிக்கி, சுண்ணாம்பு காளவாய் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொள்ளாச்சி சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரு சக்கர வாகனம் மட்டும் செல்ல சிறு பாதை மட்டும் விடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...