இரவில் யானை ஆனைக்கட்டி வடக்கு பகுதிக்கு நகர்ந்துள்ளதை உறுதிப்படுத்திய வனத்துறையினர், அடுத்ததாக அந்த யானை நகர வாய்ப்புள்ள பகுதிகளான செங்குட்டை, வனக்குட்டை, கோழிக்கண்டி மற்றும் ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி உடல் நலத் குறைவு காரணமாக கடும் சோர்வுடன் அங்குள்ள ஆற்றின் ஓரமாக நின்றிருந்த ஒற்றை காட்டு யானைக்குசிகிச்சை அளிப்பதில் சிக்கல் இன்றுடன் ஐந்தாவது நாளாக நீடித்துவனப்பகுதிக்குள் சென்றது.
அந்த யானையை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் ஏழு குழுக்கள் அமைத்து கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர். ஆனைகட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வனப்பகுதிகளுக்கு உள்ளே அடர்ந்த பகுதியில் யானை இருப்பதாக வந்த தகவலை அடுத்து,வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் யானையை தேடி வந்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு செங்குட்டை பகுதியில் யானை இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த இரு தினங்களில் அந்த ஒற்றை யானை, மற்றயானைகளுடன் இணைந்து நடமாடியது. இந்த சூழலில் ஊக்கையனூர் பகுதியை அடுத்த வனத்திற்குள் அந்த யானை இருப்பதாக தகவல் வந்தது.

பின்னர் இரவில் யானை ஆனைக்கட்டி வடக்கு பகுதிக்கு நகர்ந்துள்ளதை உறுதிப்படுத்தியவனத்துறையினர், அடுத்ததாக அந்த யானை நகர வாய்ப்புள்ள பகுதிகளானசெங்குட்டை, வனக்குட்டை, கோழிக்கண்டி மற்றும் ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு கண்காணிப்பு கேமராக்களைபொருத்தியுள்ளனர்.

அதே வேளையில், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது யானை சற்று உடல்நலத்துடன் இருப்பதாகவும் அதன் காரணமாகவே வனத்திற்கு வெளியே வராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளேயே சுற்றி வருவதாகவும் தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள், எப்படியிருப்பினும் தண்ணீர் அருந்த அருகிலுள்ள ஆற்றுக்கு யானை வரும் எனவும் அதன் அடிப்படையிலேயே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

யானைக்கு விருப்பமான பலாப்பழங்களை வன எல்லைப்பகுதிகளில் மற்றும் வலசை பாதைகளில் கொட்டியிருக்கின்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் எப்படியும் வனத்திற்கு வெளியே வரக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, யானை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்களில் நான்கு குழுக்கள் வன எல்லை பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் கண்காணித்து வருகின்ற நிலையில்,இரண்டு குழுக்கள் துப்பாக்க, அரிவாள் தீப்பந்தங்களுடன் ஆனைக்கட்டி அடர் வன உள் பகுதியிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
யானை கண்டறிப்படும் பட்சத்தில் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்க மருந்துகளையும் உணவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்துள்ள வனத்துறையினர் கலீம், முத்து இரண்டு கும்கி யானைகளையும்தாயார் நிலையில் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.