உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி பேரணி

183வது புகைப்பட தினமான இன்று பொள்ளாச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.


கோவை: உலகம் முழுவதும் புகைப்பட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 183வது புகைப்பட தினமான இன்று பொள்ளாச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.



நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணியானது மத்திய பேருந்து நிலையம், மாரக்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இதனை தொடர்ந்து தனியார் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அரசு மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



இதனையடுத்து பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், அரசின் நல திட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகைப்பட கலைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறோம் ஆனால் அரசின் எந்த சலுகைகளும் புகைப்பட கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் ஒளிப்பதிவு ஒப்பந்தங்களை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய அவர்கள், நேரடியாக புகைப்பட கலைஞர்கள் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

புகைப்படக் கலைஞர்களின் பல ஆண்டு கோரிக்கையான தனி நல வாரியத்தை அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...