கோவையில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு உரிமையாளரிடமே உதவி கேட்ட திருடனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...!

சூலூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனத்தை பழுது பார்ப்பதற்காக அதன் உரிமையாளரிடமே வந்து உதவி கேட்டுள்ளார். திருடனை உரிமையாளர் மடக்கி பிடித்த நிலையில் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.



கோவை: சூலூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு உரிமையாளரிடமே உதவி கேட்ட திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

சூலூர் அருகேயுள்ள ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பொறுப்பாளராக பணியாற்றி வரு இவர், வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து அவர், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். குரும்ப பாளையம் வழியாகச் சென்றபோது ஒரு கடை முன்பு திருடுபோன தனது இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது.

வண்டியின் பக்கத்தில் நின்றிருந்த திருடன், முருகனிடமே வந்து தனது வாகனம் ரிப்பேர் ஆகி விட்டது, ஒர்க்‌ஷாப் எப்போது திறப்பார்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன், தனது இரு சக்கர வாகனத்தையே திருடி வந்து விட்டு தன்னிடமே உதவி கேட்ட நபரை மடக்கி பிடித்துள்ளார்.

2 பேரும் தகராறில் ஈடுபடுவதை கண்டு அங்கு திரண்ட பொதுமக்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



தகவலின் பேரில் வந்த சூலூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியன் (30) என்பதும் அவர் மீது ஏற்கனவே பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது. ஆனால், தற்போது நடைபெற்ற திருட்டு வழக்கில், FIR இன்னும் பதியப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பைக்கை திருடியதும் இல்லாமல், பைக் உரிமையாளரிடமே ரிப்பேர் செய்ய உதவி கேட்ட சுவாரசியமான சம்பவத்தை பலரும் சமூக வலயத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...