ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோவை பந்தய சாலையில் நடைபெறும் பணிகளை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பந்தய சாலை பகுதியில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க பொறியாளர்களுக்கு காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வின்போது அறிவுறுத்தினர்.



கோவை: பந்தய சாலை பகுதியில் 40.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்த வளர்ச்சி திட்ட பணிகளை இன்று மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.



இந்த ஆய்வின் போது, பந்தய சாலை பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைத்தல், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுதல், முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.



இந்த ஆய்வில், போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து உதவி ஆணையர் சரவணன், மத்திய மண்டல ஆணையர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...