திருப்பூர் உழவர் சந்தையில் செய்தித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு; விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தென்னம்பாளையம் உழவர் சந்தையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



திருப்பூர்: தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். 



திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், இங்கு காய்கறிகளை வாங்குவதற்காக, அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை வந்து செல்வர். 

இன்று அதிகாலை தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த  விவசாயிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். 



உழவர் சந்தையில் தெருவிளக்கு , குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து, தென்னம்பாளையம் உழவர் சந்தை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாமிநாதன்,  விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து கேட்டறிந்தார்.  



இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாவட்ட ஆட்சியர் வினீத் , மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...