கோவை கருமத்தம்பட்டி அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (27). கூலி தொழிலாளி இவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகாரின் பேரில்,ரமேஷ்குமாரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதன் பின்னர் வழக்குப்பதிவுசெய்த போலீசார், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ரமேஷ்குமாரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.