முதலமைச்சர் கோவை வருகை: வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து திமுக செயற்குழு கூட்டம்

வரும் 23 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருவதை அடுத்து, வரவேற்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், காளப்பட்டியில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வர உள்ளார்.

இந்நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை தரும் தமிழக முதல்வருக்கு, வழி நெடுங்கிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை காளப்பட்டியில் இன்று நடைபெற்றது.



தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவை விமான நிலையம் முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் வரை தமிழக முதல்வர் செல்லும் பாதை முழுவதும், மாவட்ட வாரியாக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் - முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், முன்னாள் எம்பி நாகராஜ் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



முதல்வர் வருகை

ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். அன்று இரவு, விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஓய்வு எடுப்பார்.

ஆகஸ்ட் 24 காலையில் ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி அருகே நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 82 பயனாளிகளுக்ககு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.

ஆகஸ்ட் 24 மாலை பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அந்த கூட்டத்தில், பல்வேறு கட்சியை சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளனர்.

ஆகஸ்ட் 25 திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள உள்ளார்.

ஆகஸ்ட் 26 கோவை பிஎஸ்ஜி கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்வார். பின் அன்று மாலையே விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...