'இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி' அன்னூரில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனர் அகற்றம்...!

அன்னூர் குடியிருப்பு பகுதியில் இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி என வைக்கப்பட்ட சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், பேனரை அகற்றி, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: அன்னூரை அடுத்த காடுவெட்டிபாளையம் ஊராட்சியின் குடியிருப்பு பகுதியில் சர்ச்சைக்குறிய அறிவிப்பு பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனரில் “எச்சரிக்கை இது இந்து மக்கள் மட்டும் வாழும் பகுதி இங்கு மதப் பிரச்சாரம் மற்றும் மதக்கூட்டங்கள் போன்றவை நடந்த அனுமதியில்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற சர்ச்சைக்குறிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார் சர்ச்சைக்குறிய அந்த அறிவிப்பு பேனரை உடனடியாக அங்கிருந்து அகற்றினர்.

மேலும், அந்த பேனர் தொடர்பாக புகார் ஏதும் இல்லாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும், இருப்பினும் பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...