வரும் 26ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முடிவு

திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்து பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளரான தேவராஜன் தலைமையில், திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

கூட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து 2ம் மண்டல பாசனத்திற்கு வரும் 26ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 4 சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்படும் என்றும், தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் பரமசிவம்: ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பி.ஏ.பி. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த மாட்டோம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதனை மீறியும் செயல்படுத்த நினைத்தால் கண்டிப்பாக திட்டத்தை நிறைவேற்ற பாசன சபை தலைவர்கள், உறுப்பினர்கள் விடமாட்டோம் என்றும், எந்தவிதமான போராட்டத்தை வேண்டுமானாலும் கையில் எடுக்க தயங்க மாட்டோம்.

கால்வாய்களை சீரமைக்க ரூ.7 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டு உள்ளது. நிதி வந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும். நிதி வராத பட்சத்தில் பராமரிப்பு நிதியை கொண்டு முடிந்த அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.

கால்வாய் சீரமைப்பிற்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பணி அமர்த்துவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் பாசன சபை சங்க கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதி உதவி பொறியாளர்கள் கலந்துகொள்வார்கள்.

இதேபோல், காண்டூர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...