தேர்வான மணிகண்டபூபதி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் அவரை தேர்வு செய்வது குறித்து முன்பே தீர்மானிக்கப்பட்டது என குற்றம்சாட்டி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் இந்த தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது, அரசு கல்வி தொலைக்காட்சிக்கு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மணிகண்ட பூபதி புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், தேர்வான மணிகண்டபூபதி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் அவரை தேர்வு செய்வது குறித்து முன்பே தீர்மானிக்கப்பட்டது என குற்றம்சாட்டி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின், மாவட்ட தலைவர் ஆசிக் அஹமது தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நியமனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்பதவிக்கு பலர் விண்ணப்பித்தும், யாரையும் நேர்காணலுக்கு அழைக்காமல், தமிழக அரசு நிராகரித்துள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும், தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகிறதா..? என சந்தேகம் எழுவதாகவும் விமர்சித்தனர்.
எனவே, உடனடியாக மணிகண்டபூபதியின் நியமனத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் வலியுறுத்தினர்.