கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அரசு திட்டங்கள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



இக்கூட்டத்தில் பேசிய கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இயங்கும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளி, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை போலவே அதிக மதிப்பெண் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

"பள்ளிப்படிப்பை முடித்து வெளியில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். ஏற்கனவே இப்பள்ளிகளில் பயின்று தற்பொழுது உயர்ந்த நிலையில் உள்ள நபர்களை அழைத்து உரையாற்ற செய்வதன் மூலம் மாணவர்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்து, கல்வியில் சிறந்தவர்களாக விளங்கி பொருளாதார அளவில் உயர்ந்த நிலையினை அடைய பயனுள்ளதாக அமையும்", எனவும் தெரிவித்தார்.

தாட்கோ திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், வணிகத்தை உருவாக பொருளாதார உதவி மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த சிகிச்சையகம், ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், இத்தகைய திட்டங்களை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மண்டல தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...