கோவையில் நகை கடையில் போலி நகையை வைத்துவிட்டு ஒரிஜினல் நகையை திருடிச் சென்ற தாய், மகள் கைது

கடந்த ஜனவரி 26-ம் தேதி, கோவையில் உள்ள தங்கநகை கடையில் பர்தா அணிந்து வந்து இரு பெண்கள், போலி நகைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் நகையை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில், விசாரணை நடத்தி வந்த போலீசார் 7 மாதங்களுக்கு பிறகு இருவரையும் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை பெரிய கடை வீதியில், சிவகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 26ஆம் தேதி, இந்த நகைக்கடைக்கு பர்தா அணிந்தபடி வந்த இரு பெண்கள், நகைகளை வாங்குவதற்காக வந்துள்ளதாக தெரிவித்து, நகைகளை பார்த்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து, இருவரும் பின்னர் வந்து நகைகளை வாங்க வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள், சென்ற பின்னர் நகையை சோதித்த போது, அவை எடை குறைவாக இருந்தது மட்டுமல்லாமல், போலி கவரிங் நகை என்பதும் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் சிவகுமார், அந்த பெண்களை கடைவீதி முழுதும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், நகைகளை கொள்ளையடித்த இரு பெண்களையும் .வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், கடைவீதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கடந்த ஜனவரி மாதம், சிவகுமாரின் நகைக்கடையில் நூதன திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்ட சுமதி மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் தாய், மகள் என்பதும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், இவர்கள் இருவருக்கும் வேறு எதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...