கோவையில் தேசிய கொடியின் கீழ்,

கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில், ஒருவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமலும், அதனோடு, தேசிய கொடியின் கீழ் "இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்" என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 75 சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக 13ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி மூன்று நாட்களில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு வீடுகளில் தேசியக் கொடியானது ஏற்றப்பட்டு இருந்தது. 15ஆம் தேதி மாலை அனைவரும் தேசிய கொடியை இறக்கிய நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில், சண்முகம் என்பவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமல் இன்னும் பறக்கவிட்டபடி உள்ளது.



அதனோடு, தேசிய கொடியின் கீழ் "இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்" என்ற வாசகமும் எழுதப்பட்டு தேசிய கொடியானது பறக்க விட்டபடி இருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மேலும், தேசிய கொடியில் இதுபோல வாசகங்கள் எழுவதும், சுதந்திர தினம் முடிந்தும் கொடியை பறக்கவிடுவதும், தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...