கனல் கண்ணனை விடுதலை செய்யவில்லை என்றால், இந்து முன்னணி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் - காடேஸ்வர சுப்ரமணியம்

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி இலக்கிய பிரிவு செயலாளருமான கனல் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்.



கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வர சுப்ரமணியம், கனல் கண்ணனின் கருத்தை இந்து முன்னணி முழுமையாக வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், கனல் கண்ணன் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இந்து முன்னணி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...