வால்பாறையில் பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - 180 ஊழியர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 180 ஊழியர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90 பள்ளிகள் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

நகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர் என 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில், நகராட்சி மேலாளர் ஜலாவுதீன் கலந்து கொண்டு, பள்ளி குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், உணவு சமையல் செய்தவுடன் ஊழியர்கள் சாப்பிட்டு பார்த்து பின்பு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும், என அறிவுறுத்தினார்.



இதேபோல், பள்ளி குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த தண்ணீரை அருந்த கொடுக்க வேண்டும் என்றும், வாரம் ஒரு முறை தண்ணீர் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரை சுத்தம் செய்து புதிய தண்ணீர் பயன்படுத்தி சமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



மேலும், சுத்தமான காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை கொண்டு சமைத்த உணவை மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...