சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயில் மீது ரயில்வே மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை 5 மணி நேரம் பாதிப்பு…!

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று மதியம் 2:30 மணிக்கு புறப்பட்ட இன்டர்சிட்டி ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது, மேலே சென்ற ரயில்வே மின் ஒயர் அறுந்து ரயில் மீது விழுந்தது. இதனால், சேவூர் அருகே ரயில் நிறுத்தப்பட்டது.



கோவை: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே ரயில்வே மின் ஒயர் அறுந்து சென்னையில் இருந்து கோவை கிளம்பிய இன்டர்சிட்டி ரயில் மீது விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயில் காலை 6.30 மணிக்கும், சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் 2.30 மணிக்கு இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வழக்கம் போல, சென்னையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி கிளம்பியது.



அப்போது, ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது, மேலே சென்ற ரயில்வே மின் ஒயர் அறுந்து ரயில் மீது விழுந்தது.



இதனால், சேவூர் அருகே ரயில் நிறுத்தப்பட்டது.



மேலும், ரயில்வே ஒயர் அறுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் உட்பட பிற ரயில்களும் சேவூர் அருகே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்த கம்பிகளை நீண்ட நேரத்துக்கு பின் பொருத்தினார். இதனால் சுமார் 5 மணி நேரத்திற்கு பின் மீண்டும் இன்டர்சிட்டி ரயில், சேவூரில் இருந்து கோவைக்கு கிளம்பியது.

இந்த சம்பவத்தால், இன்டர்சிட்டி மற்றும் பிற இரயில் சேவைகளும் தடைப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.தீடீரென, மின் கம்பி அறுந்தது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...