கோவை பிச்சனூரில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலி…!

கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியில் கிருத்திக் என்ற 7 வயது சிறுவன், வீட்டில் இருந்த வாட்டர் ஹீட்டரை பிடித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பிச்சனூர் அருகே தண்ணீர் ஹீட்டரை பிடித்த 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்- பேபி, தம்பதியினர்.



இவர்களுக்கு கிருத்திக் என்ற 7 வயது மகன் உள்ளான். கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் ராமன் உயிரிழந்ததால், கிருத்திக் தனது தாயுடன் பாட்டி விட்டில் தங்கி, பிச்சனூர் அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பட்டி ராமாத்தாள் வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் சூடு செய்ய ஹீட்டர் கருவியை பயன்படுத்தியுள்ளார். அப்போது, ஹீட்டர் அருகே கிருத்திக் அமர்ந்திருந்ததாக தெரிகிறது.



இதனிடையே, ராமாத்தாள் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்த போது, வாட்டர் ஹீட்டரை பிடித்தவாறு மின்சாரம் பாய்ந்து சிறுவன் கிருத்திக் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமாத்தாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு கிருத்திக்கை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி, மேல் சிகிச்சைக்காக மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.



சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் பேபி கொடுத்த புகார் அடிப்படையில் கே.ஜி.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் இறந்து 3 மாதங்களே ஆன நிலையில், மகனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களை சொல்லிலடங்கா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...