பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை காந்தி பார்க் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கடந்த 31ஆம் தேதி சென்னையில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணியின் கலை இலக்கிய முன்னணி அமைப்பின் மாநில பொறுப்பாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலை உடைக்கப்பட வேண்டும், என சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, அவர் மீது - இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டிவிடுதல், ஒற்றுமையை சீர் குலைத்தல்' போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தலைமறைவான கனல் கண்ணனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அவர் புதுச்சேரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
அவரின் கைதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, காவல்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.