கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர் தற்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி, கோவை வேளாண் பல்கலை., விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவனின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் வேளாண் பல்கலைகழக மாணவன் பிரோதாஸ் குமார் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது



கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயோ டெக் முதலாமாண்டு படித்து வந்த மாணவன் பிரோதாஸ் குமார் (19), கடந்த 19 ஆம் தேதி ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இச்சம்பவம் குறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவனின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி, டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிட்டு இருப்பதன் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் பழனி என்பவரது மகன் தான் பிரோதாஸ் குமார் (19). இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இளங்கலை வனவியல் (Bsc. Forestry) பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த மாணவர் பிரோதாஸ் குமார், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் துறையில் சேர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் மாணவன், கல்லூரியின் ஹாஸ்டல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து, ஆர்.எஸ். புரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால், மாணவன் கடும் மன உலைச்சலில் இருந்ததாகவும் அவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. 

தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக திருவண்ணாமலையில் மாணவன் வீட்டில் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

எதிர்பார்த்த படிப்பை படிக்க முடியவில்லை என்ற விரக்தியில், மாணவன் கடந்த மே மாதம் வேளாண் பல்கலைக்கழகத்தின் விடுதியில் அரளிச் செடியை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் உறுதியாகியுள்ளது. 

இதை தொடர்ந்து, மாணவர் தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...