கோவையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து கேட்புக் கூட்டம்

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்களிடையே கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொது மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் இன்று கோவையில்நடைபெற்று வருகிறது.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி (SNR) கலையரங்கில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் பொதுமக்களிடையே கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.



தமிழ்நாடு மின் உற்பத்தி மின்பகிர்மான கழகம் (TANGEDCO), தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழக நிறுவனம் (TANTRASCO), மாநில மின்சுமைப்பகுப்பு மையம் (SLDC) ஆகியவற்றின் மின்கட்டண விகித திட்டத்தின் படி 2022-23 முதல் 2026-27 வரைக்கான மின் கட்டணத்தையும் மற்றும் இதர கட்டணத்தையும் நிர்ணயித்தல் ஆகிய மனுக்களின் மீது பொது மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது.

இதில், கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர், சிறு குறு தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை முன் வைத்து, குறைகளை மனுக்களாகவும்கொடுத்தனர்.



இதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன், செயலாளர் வீரமணி, இயக்குனர் சீனிவாசன், பிரபாகரன், மனோகரன் ஆகியோர் கருத்துக்களை கேட்டறிந்து பதிவு செய்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...