கோவையில் காளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர விழாவில், கணினி பொறியியல் பட்டம் படித்து அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும், கீர்த்திகா என்ற மாற்றுத்திறனாளி பெண் கொடியேற்றி விழாவை சிறப்பித்துத்துள்ளார்.
கோவை;நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்றைய, சுதந்திர தின விழாவில் பல்வேறு நெகிழ்ச்சியானசம்பவங்களும் அறங்கேறியிருக்கின்றன.
அதன்படி, கோவையில் காளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் (Midastouch school of excellence) சுதந்திர தினவிழாவிற்கு,மாற்றுத்திறனாளி பெண்ணை கெளரவ விருந்தினராக அழைத்து குத்து விளக்கேற்றி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
நிகழ்ச்சியில், கணினி பொறியியல் பட்டம் படித்து அமேசான் நிறுவனத்தில் கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்டாக பணியாற்றும், கீர்த்திகா என்ற மாற்றுத்திறனாளிப் பெண் கொடியேற்றி விழாவை சிறப்பித்துத்துள்ளார்.

தோள்பட்டைக்கு கீழ் செயலிழந்தநிலையில் உள்ள கீர்த்திகா, நான்கு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேசிய கொடி ஏற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்பள்ளியின் தாளாளர், ஷர்மிளா ராம் ஆனந்த், தமிழ்நாடு பாரா ஸ்போர்ட் அசோசியேசனின் கோவை மாவட்ட தலைவர் என்பதால் அவர் மாற்றுத்திறனாளி ஒருவரை அழைத்து கெளரவித்து தன் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் சுதந்திர தின நிகழ்வை கொண்டாடியுள்ளதுஅனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.