உடல் நலக்குறைவால் தவித்து வரும் யானையை, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனத்துறையினர் கூட்டாக கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு - கேரளா எல்லையில் மாறி மாறி ஒற்றை யானை நடமாடி வருவதால், யானைக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை: தமிழக - கேரளா எல்லையான, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி வனப்பகுதி அருகே கொடுங்கறை பள்ளம் ஆற்றங்கரையில் ஆண் யானை ஒன்று வாயில் காயத்துடன் உடல் மெலிந்து, சோர்வுடன் நிற்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்துச் சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க துவங்கினார். ஆனால், ஆற்றில் தண்ணீர் குடித்த அந்த ஆண் யானை கொடுங்கரை பள்ளத்தில் இருந்து தாசனூர் வழியாக கேரளாவிற்குள் சென்றால், யானைக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அந்த யானை இதே பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளதால்,பெ.நா.பாளையம் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, வழக்கமாக கொடுங்கரை பள்ளத்தில் தண்ணீர் குடிக்க வரும் கேரளா யானைகள் மீண்டும் கேரளாவிற்கே சென்று விடும். அவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று தமிழகத்திற்குள் வந்து மீண்டும் கேரளா சென்றுள்ளது. இருப்பினும், மீண்டும் யானை தமிழக எல்லைக்குள் வந்தால் உடனடியாக சிகிச்சையளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உடல் நலக்குறைவால் தவித்து வரும் யானையை, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனத்துறையினர் கூட்டாககண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாடு - கேரளா எல்லையில் மாறி மாறி ஒற்றை யானை நடமாடி வருவதால், யானைக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அருகாமையில் சென்றால் அந்த யானை விரட்டுவதனால் சற்று தூரத்திலிருந்து யானையை கண்காணிக்கும் வனத்துறை, யானையின் உடல் மெலிந்து காணப்படுவதனால், முதல் கட்டமாக பாலப்பழம், தென்னை குருத்து உள்ளிட்ட உணவுகளை கொடுத்து யானையை கண்காணித்து வருகின்றனர்.