கோவையில் ஆற்றில் சிக்கி கேரளாவை சேர்ந்த நபர் பலி - உறவினர்களுடன் மீன் பிடிக்க சென்ற போது பரிதாபம்..!

கேரளா மாநிலம் பாலக்காடு கோழிப்பாறையை சேர்ந்தவர் ஆண்டனி ஜான் (33) என்பவர் அவர் மாமனார் உட்பட இரு உறவினர்களுடன் க.க.சாவடி அருகே உள்ள குமிட்டிபதியில் மீன்பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை; கேரளா மாநிலம் பாலக்காடு கோழிப்பாறையை சேர்ந்தவர் ஆண்டனி ஜான் (33) சென்டரிங் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மாமனாரான ஜோசப் ஆபிரகாம் (58) மற்றும் உறவனர்கள் ஜோசப் (35), ஸ்டீபன் (32) ஆகியோருடன் கோவை க.க.சாவடி அருகே உள்ள குமிட்டிபதிக்கு வந்துள்ளனர்.

அப்போது குமிட்டிபதி - வேலந்தாவளம் சாலையில் உள்ள ஆற்றில் 4 பேரும் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, பெரிய மீன் ஒன்று தூண்டிலில் மாட்டிக் கொண்டதால்தூண்டிலை உள்ளே இழுத்துள்ளது.



இதையடுத்து, ஆண்டனி ஜோசப்தூண்டிலை எடுக்க ஆற்றில் இறங்கி நீந்தி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆண்டனி ஜோசப் ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டு தவித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மாமனார் மற்றும் உடன் வந்தவர்கள் ஆண்டனி ஜோசப்பை ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அதற்குள் ஆண்டனி ஜோசப் அவரது மாமனார் கண்முன்னேநீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



இதையடுத்து, கோவைப்புதூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி சில மணி நேரத்திற்கு பிறகு அவரது உடலை மீட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து வரும் கே.ஜி. சாவடி போலீசார், ஆண்டனி ஜான் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விளையாட்டாக மீன் பிடிக்கச் சென்று விபரீதத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...