கோவை மத்துவராயபுரம் ஊராட்சி மேல் நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சி தலைவர் என இருவரில் யார் கொடி ஏற்றுவது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை: நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடியிருக்கின்றனர். ஒருபுறம் கொண்டாட்டம் களைக் கட்டியிருந்தாலும், சில இடங்களில் விரும்பத்தகாத சலசலப்புகளும் அரங்கேறியிருக்கின்றன.
இன்று கோவை மத்துவராயபுரம் ஊராட்சியில் இயங்கும் நூற்றாண்டு பழமையான மேல் நிலைப்பள்ளியில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொண்டாமுத்தூர் ஒன்றியம் மத்துவராயபுரம் ஊராட்சி அரசாங்க மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயந்தி. இந்த மத்துவராயபுரம் முதல்நிலை ஊராட்சிக்கு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் கிட்டுசாமி. இவர் மத்துவராயபுரம் ஊராட்சிக்கு பழங்குடியின இனத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பஞ்சாயத்து தலைவர் ஆவார்.
இன்று பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அப்போது, தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு வந்தபொழுது பள்ளிக்கு வழக்கம்போல் ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்று வேண்டுமென விழாவிற்கு வந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் தரப்பின் வாதத்துக்கு மறுப்பு தெரிவித்த தலைமை ஆசிரியை ஜெயந்தி, பள்ளியில் தலைமையாசிரியர் தான் கொடியேற்ற வேண்டும் என்று தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. ஆனால், அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்ததால், ஏமாற்றம் அடைந்த தலைமை ஆசிரியை, "தேசியக் கொடியை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்.." என்று கூறி தனியே வந்து அமர்ந்துள்ளார்.
இதனால் கொடியேற்றம் நிகழ்வு தள்ளிப்போனது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் செய்வதறியாது வெயிலில் அமர்ந்திருந்தனர். இதனிடையே, அங்கிருந்த ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து தலைவர் கிட்டுசாமி மற்றும் தலைமை ஆசிரியை ஜெயந்தி இருவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாணவர்கள் வெயிலில் வாடுவதை எடுத்துரைத்து தேசிய கொடியை ஏற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர், தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் பஞ்சாயத்து தலைவர் கிட்டுசாமி இருவரும் கூட்டாக தேசிய கொடியை ஏற்றினர். சுதந்திர தின விழா கொடியேற்று நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பழங்குடியினர் என்பதனால் தலைமை ஆசிரியை கொடியேற்ற அனுமதிக்கவில்லை என்று கூறி கிட்டுசாமி தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ், சோனல் துணை பி.டி.ஒ இந்திராணி பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், ஊராட்சி மன்ற தலைவரே இனி வரும் காலங்களில் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிக் கொள்ளலாம் என ஏகமனதாக முடிவு செய்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து சமாதானத்தை தேடி தந்திருக்கின்றனர்.
கோலாகலமாக சுதந்திர தின விழா அன்று, மத்துவராயபுரம் முதல்நிலை ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றுவதில் தலைமை ஆசிரியை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் இடையே நடந்த சலசலப்பான சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் மக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.