சூலூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொண்ட கோவை மாவட்ட ஆட்சியர்..!

இன்று கிட்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையாளராக பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு, குறைகளையும் கேட்டறிந்தார்.


கோவை: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் உத்தரவு, அதன்படி, இன்று சூலூர் அருகேயுள்ள கிட்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிட்டம்பாளையம் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சியில் 01.04.2022 முதல் 31.07.2022 முடியவுள்ள காலத்தில் செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்கள் படித்துக் காண்பித்து ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர் வழிப்பாதை மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, வீடு வழங்கும் திட்டம் 2010 மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.



இந்த கிராம சபை கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டு புதிதாக போடப்பட்ட தீர்மானங்களுக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும், ஏற்கனவே போடப்பட்டிருந்த தீர்மானங்களுடன் சிறப்பு தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளது என்றும், இந்த தீர்மானங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் எனவும் கூறினார்.



தொடர்ந்து பேசிய ஆட்சியர், குளத்துப்பாளையத்தை பொருத்தமட்டில், சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், குளத்துப்பாளையம் கிராமத்தில் அனைவரும் வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி வரவேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சமீரன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் கிட்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சந்திரசேகர், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...