திருப்பூரில் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியை வழிமறித்து மனு கொடுக்க முயன்ற பெண்ணால் - பரபரப்பு

விழாவின் போது, ஒரு பெண், மாவட்ட ஆட்சியரை திடீரென வழிமறித்து, கணவரின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அரசு உதவிகளை வழங்க கோரி மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: இன்று திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரை திடீரென வழிமறித்து மனு அளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கல்லூரி சாலை பகுதியில் உள்ள சிக்கண்ணா அலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



தேசிய கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் வினீத், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள வாகனத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தார்.



அப்போது கணவனை இழந்த ஒரு பெண், கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தனது கோரிக்கையை கூற முயன்றார்.



அப்போது அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர்.



இதனையடுத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணை அழைத்து அவரது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.



அப்போது அந்த பெண் தனது பெயர் ஷாலினி என்றும், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அருகில் வசித்து வருவதாகவும் கூறினார். சமீபத்தில் தனது கணவரை இறந்து விட்டதாகவும், கணவன் இறந்த பின்பு, கணவரின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஒரு அரசு உதவியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். எனவே, தயவு கூர்ந்து தனக்கு அரசு உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.



பெண்ணின் கோரிக்கையை கேட்ட மாவட்ட ஆட்சியர் வினீத், உரிய அதிகாரியிடம் நடவடிக்கைகள் எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

இச்சம்பவத்தால், சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...