திருப்பூரில் தனியார் பள்ளி மாணவர்கள் நாட்டின் 5 முக்கிய துறைகள் குறித்து மௌன நாடகம் நடத்தி அசத்தல்

75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 மாணவர்கள் இணைந்து 75 நிமிடங்கள் 5 அரசு துறையை சேர்ந்தவர்களின் பணிகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மௌன நாடகம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் உள்ள பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவர்களின் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



இதில், சுதந்திர தினத்தில் நாட்டுக்காக பாடுபடும் ஐந்து முக்கிய துறைகளான விவசாயம், மருத்துவம், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர், ராணுவம் என அவர்களின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கும் விதமாக மாணவ - மாணவியர் மௌன நாடகத்தை நடத்தினர்.



75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 மாணவர்கள் இணைந்து 75 நிமிடங்கள் 5 அரசு துறையை சேர்ந்தவர்களின் பணிகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மௌன நாடகம் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.



7 வயதான நித்திலா என்ற மாணவி இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி மற்றும் வரைந்து, இளம் வயதில் இரண்டு கைகளாலும் எழுதும் ஆற்றல் கொண்டவர் என சாதனை படைத்தார்.

இந்த நிகழ்வில் ரபா உலக சாதனை புத்தக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இரண்டு சாதனைகளையும் அங்கீகரித்து பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...