ஈஷாவில் சுதந்திர தினவிழா: காமன்வெல்த் போட்டியின் பொதுச் செயலாளர் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

75வது சுதந்திர தினவிழா மிகவும் மகத்தான நாள். மக்களின் உறுதி மற்றும் தெம்பினால் தான் நாடு முன்னேற்றத்துடன் செல்ல முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நாடு ஒரு மகத்தான நாடாக மாற வாய்ப்பு உள்ளது - சத்குரு.


கோவை: 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பிரம்மாண்டமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை ஈஷா யோகா மையத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக காமன்வெல்த் பொது செயலாளர் பெட்ரீசா மற்றும் முன்னாள் வெளியுறவு துறை செயலாளரும், ஜி20 அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஹர்த்வர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய கொடியை காமன் வெல்த் பொது செயலாளர் பெட்ரீசியா ஏற்றினார்.



அதனை தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தின் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

75வது சுதந்திர தினவிழா மிகவும் மகத்தான நாள். மக்களின் உறுதியினாலும், தெம்பினாலும் தான் நாடு முன்னேற்றத்துடன் செல்ல முடியும். தமிழ் என்றால் தெம்பு தான். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நாடு ஒரு மகத்தான நாடாக மாற வாய்ப்பு உள்ளது, என ஈஷா நிறுவனர் தெரிவித்தார்.



மண் காப்போம் இயக்கம் குறித்து பேசிய அவர், வெயில் காலங்களில் மண்ணை காப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து விவசாயிகளின் நலனுக்காக செயல்பட உள்ளதாக தெரிவித்தார். கயானா என்ற தேசத்தில் 100 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள நிலத்தை விவசாயிகள் மண் காப்போம் இயக்கத்திற்காக அளித்துள்ளதாகவும், இரண்டு வருடத்தில் அம்மண்ணிற்கு உயிரூட்டம் தருவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து நிலங்களில் கட்டிடங்கள் கட்டிவிட்டால் பாலைவனமாக மாறினாலும் யாரும் கேட்டமுடியாது என்பதால், நீதி முறையில் மண் வளத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பிரதமர் மூன்று நாட்களுக்கு தேசிய கொடி ஏற்ற கூறியது குறித்த கேள்விக்கு, தேசிய கொடி என்பது நாட்டிற்கு அறிகுறி என்றும், பாரத தேசம் என்பதே தனி உலகம் எனவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசிய கொடியில் உள்ள மூவர்ணங்களும் நம் நெஞ்சில் துடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்த நடைமுறை ஒரு முறை வந்து விட்டாலே போதும், தொடர்ந்து அனைவரும் இனிவரும் காலங்களில் பின்பற்றி கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். மண் காப்போம் இயக்கம் முடிந்து நம் நாட்டில் கால் வைத்தது மிகவும் மகத்தான நெகிழ்ச்சியான தருணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...