கோவையில் எஸ்.டி.பி. ஐ கட்சியின் சார்பில், உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் 75 அடி உயர தேசியக்கொடி ஏந்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
கோவை: நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, கோவை மாநகரம் முழுவதும் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளில்பல்வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுதந்திர தினத்தை போற்றும் வகையில், கோவையில்எஸ்.டி.பி. ஐ கட்சியின் சார்பில் கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் 75 அடி உயர தேசியக்கொடி ஏந்தி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

அப்போது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் ராஜா உசைன் கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.