திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, சிக்கண்ணா அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி,சிக்கண்ணா அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் வினீத்தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.



பின்னர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊர்காவல்படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அரசின் சார்பில் வருவாய்துறை, தோட்டக்கலைத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை உட்பட அரசு துறைகள் சார்பாக229 பயனாளிகளுக்கு 1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதேபோல, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.



முன்னதாக, சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் கௌரவித்தார்.

இதனையடுத்து, பள்ளிமாணவ - மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, அமைதியை வலியுறுத்தும் வகையில் வானில் வெண் புறாக்கள் மற்றும் கலர் பலூன்கள் பறக்க விடப்பட்டன.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...