கோவையில் 'உணவு திருவிழா' - இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 50-வகை இட்லி, விதவிதமான கீரைகளுடன் அசத்தலான உணவுகள்..!

உணவு திருவிழாவில் நவதானியங்கள், கீரை வகைகள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் உணவு திருவிழாவில் இடம் பெற்றிருந்த நவதானிய உணவு பொருட்களை சுவைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறை நடத்திய நவதானியங்களால் ஆன உணவுத் திருவிழா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கோவை நவ இந்தியா அருகே உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உகந்த உணவுத் திருவிழா என்ற தலைப்பில் நவதானியங்களால் ஆன உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் நவதானியங்கள், கீரை வகைகள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.



மேலும் ஆட்சியரும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் உணவுத் திருவிழாவில் இடம் பெற்றிருந்த நவதானிய உணவு பொருட்களை சுவைத்தனர்.



இந்த உணவுத் திருவிழாவில் கம்பு கேழ்வரகு ராகி மக்காச்சோளம் போன்ற பல வகையான தானியங்களால் ஆன இட்லி, தோசை, கேக், வடை போன்ற பல வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல் 50 வகையான இட்லிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.



இந்த உணவுத் திருவிழாவில் கேட்டரிங் மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நலத்துறை பெண் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...