மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குடிபோதையில் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இளைஞர் மீது ஆட்சியர் சமீரன் உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடிபோதையில் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (23). இவர் மீது கோவை மாவட்டத்தில் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மே 8ம் தேதி போதையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை தாக்கி கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் ஹரிஹரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் இதற்கான ஆணை சிறையில் உள்ள ஹரிஹரனிடம் வழங்கப்பட்டது.