ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை..!

ஈமு கோழி நிறுவனத்தை நடத்தி முதலீட்டாளர்களிடம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு கோவை நீதிமன்றம் 10-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.



கோவை: ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு கோவை நீதிமன்றம் 10-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. இவருடன் லோகநாதன், புவனேஸ்வரி, செல்வம், சாந்தி, ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர்.

பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரம் செய்து ஈமு கோழி நிறுவனத்தில் இரண்டு விதமான திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களை கவர்ந்து அவர்கள் கோழிப்பண்ணையை நடத்தி வந்தனர்.

இரண்டு திட்டங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஆறு ஈமு கோழி குஞ்சுகள் கொடுத்தும் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த பணத்திற்கு வட்டியாக கொடுப்பதாகவும் முதலீட்டாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே பணத்தை திருப்பி தராமல் 140 முதலீட்டாளர்களிடம் ஐந்து கோடியே 56 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகினர்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் ஒருவரான சென்னிமலையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மொத்தம் 150 சாட்சிகளை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் இன்று அதற்கான தீர்ப்பை வழங்கியது.

இதில் ஈமு கோழிப்பண்ணையை நடத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றிய செல்வகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். வழக்கில் சேர்க்கப்பட்ட மற்ற நால்வர் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...