நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 26-இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு..!

நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், திருப்பூரில் உள்ள அவரது உறவினரின் கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் பாஸ்கர், இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்திவருகிறார்.

பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும், இதையொட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



இவ்வழக்கு சம்பந்தமான பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள்மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 6 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பென்னி காம்போர்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ஹரி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் இன்று ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



ஹரி பாஸ்கரின் உறவினர் என்றும், பினாமி பெயரில் இந்த நிறுவனம் நடத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும், கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் ஆவணங்கள் குறித்து தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3-மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...