75 வது சுதந்திர தின விழா: கோவை விமான நிலைய பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை....!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள், குண்டு வெடிப்பு நிபுணர்கள் மூலம் என தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை உத்தரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...