அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் - கோவையில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் பேட்டி..!

செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து அத்திக்கடவு அவிநாசி திட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், 1000-வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.



கோவை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்திற்குள் முடிக்க வில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் மேற்கொள்வோம் என பா.ஜ.க விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டியளித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 1856-கோடியில் 3-ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம், தற்போது மிக மோசமாகக் கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்டு கிடப்பதாக தெரிவித்தார்.

இத்திட்டத்தினால் கோவையில் உள்ள சுமார் 2000-குளம் குட்டைகள் பயன் பெறும் எனவும், இதில் இன்னும் 800 குட்டைகளை இணைக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார். கொரோனா காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை தடையில்லாமல் இப்பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இத்திட்டம் 2021-ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய திட்டம் எனவும், ஆனால் திமுக அரசு பதவியேற்ற பின்பு இதுவரை அத்திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறினார். 2.2-கிமீக்கு பைப் போடாததால், 17-மாதங்களாக இத்திட்டம் கிடப்பில் கிடப்பதாக தெரிவித்தார்.

இத்திட்டம் மட்டும் கடந்த ஆண்டு முடக்கப்பட்டிருந்தால் பல்வேறு பயன்கள் கிடைத்திருக்கும் என தெரிவித்தார். மேலும், திமுகவின் திட்டமிட்ட தூண்டுதலால் சிலர் அப்பகுதியில் பைப் லைன் போடவிடாமல் தடுத்து வருவதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சி வந்த பிறகு பைப்லைன் போடுவதற்கு சில விவசாயிகள் வேண்டும் என்றே திட்டத்தை நிறுத்த இழப்பீடு கேட்பதாக தெரிவித்தார். இது குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லை என தெரிவித்தார்.

இந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து அத்திக்கடவு அவிநாசி திட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், 1000-வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டத்தை முடிக்க அரசுக்கு கால அவகாசம் அளிப்பதாக கூறினார். மேலும் அதனை முடிப்பதற்கு அதிகாரிகள் அரசு அலுவலர்கள் தயாராக உள்ளதாகவும் அரசு தான் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்தை தாமதப்படுத்தி மீண்டும் திட்டத்தின் மதிப்பை அதிகரித்து அதன் மூலம் லாபம் கொழிக்க திமுக துடிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முன்னெடுப்பு இல்லை என்றும், சிலவற்றைச் செயல்படுத்தும் போது தமிழக அரசு செய்வது போல் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் செய்வதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்த உடன் மத்திய அரசின் முழுமையான திட்டங்கள் மக்களிடம் சேரும் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...