கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து விபத்து..!

விளாங்குறிச்சி சாலையில் உள்ள குழாயில் எரிவாயுவை தண்ணீருடன் கலந்து சோதனை மேற்கொண்ட போது குழாய் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு பாதிப்பு ஏற்படவில்லை.



கோவை: கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாயில் ஆய்வு மேற்கொண்ட போது வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 9 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு வழங்கும் பணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் 8 ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. குறிச்சி, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், அவினாசி சாலை, காளப்பட்டி, தண்ணீர் பந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகிறது.



அப்போது விளாங்குறிச்சி சாலையில் உள்ள குழாயில் எரிவாயுவை தண்ணீருடன் கலந்து சோதனை மேற்கொண்ட போது குழாய் வெடித்து சிதறியுள்ளது.



இதனால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு பாதிப்பு ஏற்படவில்லை.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...