திமுக போஸ்டர்கள் இன்னும் அகற்றப்படாதது ஏன்? கேள்வி எழுப்பும் பாஜக.. ஆட்சியர் மீது வழக்கு தொடர உள்ளதாக மாவட்ட தலைவர் பேட்டி..!

மாவட்ட நிர்வாகம் அனைத்து போஸ்டர்களையும் அகற்றவில்லை என்றால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து போஸ்டர்களையும் அகற்றுவோம், ஆட்சியர் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தெரிவித்தார்.



கோவை: மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேட்டியளித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து கட்சி கூட்டங்களைக் கூட்டிய பொழுது 10 நாட்களுக்குள் கோவை மாநகரில் உள்ள அனைத்து போஸ்டர்களும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால், திமுகவினர் மட்டும் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வந்ததாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம் எனவும் கூறினார். மேலும் உயர் நீதிமன்ற ஆணையை கொண்டு கோவிலை மட்டும் இடிக்கக்கூடிய இந்த அரசு ஏன் இந்த போஸ்டர் விவகாரத்தில் அதனை பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.

நேற்று பாஜக சார்பில் சுதந்திர தின விழா குறித்து போஸ்டர் ஒட்ட சென்றபோது திமுகவினர் அராஜகமாக நடந்து கொண்டதாகவும் அவர்கள் மீது தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என பீளமேடு காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இன்று இரவிற்குள் மாவட்ட நிர்வாகம் அனைத்து போஸ்டர்களையும் அகற்றவில்லை என்றால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து போஸ்டர்களையும் இன்று இரவு அகற்றுவோம் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...