கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த சேகரிக்கப்பட்ட 750-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - கேரள இளைஞர் கைது..!

விசாரணையில் கோவையில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று, அதிக லாபத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை காந்திபார்க் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவுக்கு கடத்த ரேசன் அரிசி சேகரிப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் இன்று காலை 6 மணி அளவில் சார்பு ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் கோவை காந்தி பார்க் - தடாகம் ரோடு சந்திப்பு அருகில் வந்த Tata Ace நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, தலா 25 கிலோ எடை உள்ள 30 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 750 கிலோ பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெபேஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர், மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...