போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை..!

போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல், உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தொடர்பாக அனைத்து கோணங்களிலும் காவல் துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுவதாகவும் போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: கோவையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது:-

போதை பொருட்கள் விற்பனைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல், உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, தொடர்பாக அனைத்து கோணங்களிலும் காவல் துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுகிறது.

கஞ்சா விற்பனையை தடுக்க, எங்கிருந்து கஞ்சா அனுப்பப்படுகிறது என்பதைக் கண்டறிய இரண்டு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையினர் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே2 தருணங்களில் சுமார் 20 கிலோவுக்கு மேல் கஞ்சா பிடிபட்டு விசாரணை நடந்து வருகிறது.

கல்லூரி, பள்ளிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் கடந்த மாதம் கல்லூரி, பள்ளியில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 812 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு புறம் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...