கோவையில் பேட்டரிக்கு ஊற்றும் தண்ணீரை குடித்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலர்..!

மூதாட்டிக்கு முதலுதவி அளித்த காவலர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதால் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் பேட்டரிக்கு ஊற்றும் தண்ணீரை குடித்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை - திருச்சி ரோட்டில் பந்தைய சாலை காவலர் ஶ்ரீதர் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக பார்த்த அவர், அருகே சென்று மூதாட்டியை சோதித்த போது, அங்கு தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்துள்ளது.

அதை பார்த்த போது லாரி உள்ளிட்ட பேட்டரிகளுக்கு பயன்படுத்தும் “டிஸ்டல் வாட்டர்” என்பது தெரியவந்தது. குடிநீர் என நினைத்து பேட்டரிகளுக்கு ஊற்றும் தண்ணீரை தவறுதலாகக் குடித்ததால் மயங்கியதும் தெரியவந்தது.



இதையடுத்து,மூதாட்டிக்கு முதலுதவி அளித்த காவலர் ஶ்ரீதர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன்அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சாலையில் அனைவரும் கடந்து சென்ற நிலையில், மூதாட்டியிடம் சென்று நிலையை அறிந்து துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...